விளாத்திகுளம் அருகே கிரேன் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பொன்னுசாமி (80) என்ற முதியவர் குளத்தூரில் இருந்து பேருந்து மூலம் வேடநத்தம் வந்து, பேருந்தில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த கிரேன் வாகனம் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி பொன்னுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பொன்னுச்சாமியின் உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் விபத்து ஏற்படுத்திய காற்றாலை நிறுவன கிரேன் ஓட்டுனரான வடமாநில இளைஞரை பிடித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.