விளாத்திகுளம் அருகே தனியார் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் தெற்குதெரு பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவரின் மகன் கணேசன் (85)  இவர் 09-01-2026 வெள்ளிக்கிழமை கீழவைப்பாரில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக குளத்தூர் பேருந்து நிலையத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்தபோது, சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக குளத்தூர் பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்து ஓரமாக நின்று கொண்டிருந்த கணேசன் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் கணேசன் படுகாயம் அடைந்தார், முதலுதவி சிகிச்சைக்காக குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கணேசன் உயிரிழந்தார்.


இதனை அடுத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை பறிமுதல் செய்து, பேருந்து ஓட்டுனரான நாகலாபுரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் வடிவேல் (56) என்பவரை பிடித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார்  மேற்கொண்டு வருகின்றனர்.