விளாத்திகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் குணசேகரன் (21), ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர்,ஆட்டோவை விளாத்திகுளம் நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தபோது சிங்கிலிபட்டி அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.