எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை  சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதல் - 4 குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயம்.







கோவையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள  சாயர்புரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கூப்பிடுவதற்காக ராமச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஷேர் ஆட்டோவில் வந்துள்ளனர். ஆட்டோவை ராமச்சந்திரன் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம்  அருகே சிந்தலக்கரை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமச்சந்திரன், ஆட்டோவில் பயணம் செய்த அருணா தேவி, ரஞ்சித் மற்றும் குழந்தைகள் வாசுகி ராணி (5), வாசன் ராஜா (5), வளர்மதி ராணி(1) வாசவி (3) ஆகிய ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்து குறித்து எட்டையாபுரம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.