விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்து.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சோலைமுருகன்(43) இவர் வாடகைக்கு ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் புதூர் நாடார் பள்ளியிலிருந்து முத்துச்சாமிபுரம் கிராமத்திற்கு மாணவர்களை ஏற்றி சென்ற போது ஆட்டோ சிவலார்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது,இதில் மாணவர்கள் மற்றும் ஆட்டோவில் பயணித்த ஆசிரியர் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.