விளாத்திகுளம் அருகே 1.97-கோடி மதிப்பீட்டில் 8MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி மற்றும் புதிய கட்டுப்பாட்டு அறை திறப்பு !  


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் உபமின்நிலையத்தில் 1.97-கோடி மதிப்பீட்டில் 8MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியும், நவீன மயமாக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டு அறையையும் பேட்டரி திறன் 30V-லிருந்து 110 - வோல்டாக தரம் உயர்த்தப்பட்டதையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 


நிகழ்வில் சகார்பான் மேற்பார்வை பொறியாளர், தூத்துக்குடி மின் பகிர்மானம் வட்டம் சின்னத்துரை செயற்பொறியாளர் விநியோகம், ஊரகம்,தூத்துக்குடி.ஜெயக்குமார்உதவி செயற்பொறியாளர் வினியோகம் ஊரகம், தூத்துக்குடி.செந்தில்குமார்,உதவி செயற்பொறியாளர் வினியோகம்,விளாத்திகுளம் ரவிக்குமார் செயற்பொறியாளர் திட்டம் திருநெல்வேலி.வெங்கடேஸ்வரன் தூத்துக்குடி லால் பகதூர் சாஸ்திரி உதவி செயற்பொறியாளர் MRT தூத்துக்குடி.கரன்சிங் உதவி செயற்பொறியாளர் சிறப்பு பராமரிப்பு, கஜேந்திரன் குளத்தூர் இளநிலை மின் பொறியாளர் திமுக கழக நிர்வாகிகள், மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.