அமுதகவி உமறுப் புலவர் 382வது பிறந்தநாள் விழா - கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் மலர் போர்வை வைத்து மரியாதை!
சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுதகவி உமறுப் புலவர் 382வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பிறந்த நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்,எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஜமாத் தலைவர் காஜா மொஹிதீன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மலர் போர்வை வைத்து,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பள்ளிவாசல் சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.