வேடபட்டியில் மீண்டும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் : கடும் வெயிலிலும் வீதி வீதியாக அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா குறளையம்பட்டி, ஓ.லட்சுமி நாராயணபுரம், லக்கம்பட்டி,மாமுநைனார்புரம்,விருசம்பட்டி, வேடபட்டி,நெடுங்குளம்,கனிமார்கூட்டம், ராமசாமிபுரம்,மாதராஜபுரம், ரெட்டியாபட்டி,அரியநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் சத்யா பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் மக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வேடபட்டி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது.
பின்பு திமுக ஆட்சி வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா கிளினிக் மூடப்பட்டது இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் ஒரு அவசர மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர், மீண்டும் அதிமுக ஆட்சி வந்த உடன் வேடப்பட்டி கிராமத்தில் அம்மா கிளினிக் மீண்டும் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பெருமாள்சாமி மற்றும் அதிமுக,தேசிய ஜனநாயககட்சி கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.