விளாத்திகுளம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு!



1891 ஆம் ஆண்டு  மத்திய பிரதேசம் மாநிலம்  அம்பேத் பதா என்ற கிராமத்தில் ராம்ஜி பீமா பாய் என்ற தம்பதியினரின் 14 வது குழந்தையாக பிறந்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்,டாக்டர் B.R. அம்பேத்கரின் வரலாறு என்பது  தீண்டாமைக்கு எதிராகப் போராடி, இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த ஒரு சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணரின் வாழ்க்கை ஆகும், அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்த தலைவராகவும் திகழ்ந்தார். அவர் தனது கல்வித் தாகத்தால் கொலம்பியா பல்கலைக்கழகம் வரை சென்று பல பட்டங்களைப் பெற்றவர், மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்திய சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்டார். 




டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாள் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் சார்பில்  கடைபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில்  விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு  விளாத்திகுளம் தொகுதி அமைப்பாளர் ஆ.சடையாண்டி தலைமையில்  அண்ணல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 





இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன்,விடுதலை சிறுத்தை கட்சி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் சபாபதி,விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ரெஸ்லி வில்லாளன்,பரமசிவன், இளையராஜா,தினேஷ் வளவன்,பாலமுருகன்,சண்முகராஜ்,சந்திரசேகர்,தினேஷ்,மதன்,ராஜவேல்,ரமேஷ்,சுந்தர்,சிவா, மற்றும் விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா  அயன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.