எட்டையாபுரத்தில்  ஏ ஐ டி யு சி  அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம். 


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காததை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகன் ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் கண்ணன், சங்க பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.