விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் பொன்பாண்டி 500 பேருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பொன்பாண்டி ஆற்றுப்பாலம் பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், தனது ஆதரவாளர்கள், மற்றும் தோழமைக்கட்சியினர் 500 பேருடன் ஊர்வலமாக வந்து எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான உஷாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வின்போது அனைத்து புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.