அதிமுக 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சிறப்பாக கட்சி தொடக்க தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NK பெருமாள், ஒன்றிய செயலாளர் மகேஷ், பால்ராஜ்,விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து அதிமுக நிர்வாகிகள் செண்பகப் பெருமாள், கண்ணன், விளாத்திகுளம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார்,ஆனந்குமார், சண்முகவேல் உள்ளிட்ட பலர் ஒரு கலந்து கொண்டனர்.