இளம்புவனத்தில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  - அதிமுக கழக  கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கிய எட்டையாபுரம் நகரச் செயலாளர்! 

அதிமுக 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வரும் அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ஆலோசனைப்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் எட்டையாபுரம் நகரச் செயலாளர் ச.ராஜகுமார் அதிமுக  கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில்  இளம்புவனம் கிளை செயலாளர் இதயக்கனி கார்த்தி , பொருளாளர் செல்வராஜ், மற்றும் கழக அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.