அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு தான் திமுக வில் சீட் : இந்த தேர்தல் விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமானத் தேர்தல்!




விளாத்திகுளத்தில் 5000 பேர் கலந்து கொண்ட அதிமுக ஊழியர் கூட்டம்!




வருகின்ற 2026  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விளாத்திகுளத்தில் அதிமுக ஊழியர் கூட்டம் மற்றும் NDA கூட்டணி சார்பில் காரியாலயம்  திறப்பு  விழாநடைபெற்றது,இதில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து   பேசுகையில்...



இந்தத் தேர்தல் விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல், அதிமுகவில் இருந்து ஆட்சி பலனையும் அதிகாரப்பலானையும் அணிவித்த பின்  அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தற்போது  திமுகவில் இணைந்தவர்களை கடுமையாக தாக்கி பேசினார்.



திமுக கட்சியில் உள்ள பல பேர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான், திமுக கட்சியில் அக்கச்சியில் உள்ளவர்களை விட அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு தான் அதிக அளவில் சீட் வழங்கப்படுகிறது.




கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இங்கு பார்த்தாலும் போதை பொருட்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு  என மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வந்தனர் இன்று கடம்பூர் ராஜு  பேசினார்.




இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் என்.கே. பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், ராமச்சந்திரன், பால்ராஜ்,நகர செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,சுரேஷ், அதிமுக நிர்வாகிகள் சண்முகசாமி, ஆசைத்தம்பி, முன்னாள் கவுன்சிலர் பெருமாள் சாமி, மகளிர் அணி சாந்தி பிரியா,பாரதிய ஜனதா கட்சியினர்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.