குளத்தூரில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுகவினர்!


தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு  பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில்  அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யாவை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் அதிமுகவினர் குளத்தூர் வடக்கு காலனி,ஐந்துவீட்டுத்தெரு, விளாத்திகுளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு தெற்கு ஒன்றிய தலைவர் சிவகாமசுந்தரி, குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவி மாரிச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் குருநாதன், குளத்தூர் கிளைச்செயலாளர்கள் வேல்மயில், சின்னச்சாமி, சந்திரசேகர்,ஜோதி,ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.