அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் அதிமுகவினர் அன்னதானம்!



தமிழக முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டயபுரத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் நவநீதா தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு மனநல காப்பகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.