எட்டையபுத்தில் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், Dr.எம்.ஜி.ஆர்-ன் பிறந்த நாள் விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!



புரட்சி தலைவர் என்று மக்களால் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் ரசிகர்கள், பல்வேறு அமைப்பினர் என பலதரப்பட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அறிவுறுத்தலின் படி, எட்டையபுரத்தில் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, எட்டையபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழுவுருவச்சிலைக்கு நகரச் செயலாளர் ராஜகுமார் மாலையணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு கட்சியினருடன் சேர்ந்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.