125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கிராம மக்களின் 125 நாட்கள் வேலை உறுதித்திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், ராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு 125 நாள் வேலை உறுதித்திட்டத்தை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகைகளை ஏந்தியபடி பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...