குளத்தூர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர்!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யாயை ஆதரித்து குளத்தூர் கிழக்குத் தெரு,வடக்கு தெரு, நடுத்தெரு,மேற்கு தெரு,குளத்தூர் பஜார் பகுதிகளில் விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் அதிமுகவினர் பொது மக்களிடம் அதிமுக தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்வில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு ஒன்றிய தலைவர் சிவகாமசுந்தரி, குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிசெல்வி,பாஜக ஒன்றிய செயலாளர் சுயம்பு,குளத்தூர் அதிமுக நகர செயலாளர் வேல் மயில்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,கார்த்திக் ராம்,மருதுபாண்டி, தேவ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.