தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி" - எட்டயபுரத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!



தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் பெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரம் தனியார் திருமண மண்டபத்தில், கழகச் செயலாளர்கள் ராஜகுமார் மற்றும் அன்புராஜ் ஏற்பாட்டில் மாபெரும் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடைய சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், 


* மீண்டும் 2026 தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. 


• உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக, பிறப்பால் பதவிகளை திமுக... துரைமுருகன், கே.என்‌.நேரு எல்லாம் மனதில் புழுங்கி கொண்டிருக்கிறார்கள்.


• மகுடிக்கு பாம்பு மயங்குவது போல திமுகவின் 520 பொய் வாக்குறுதிகளைக் கேட்டும் மக்கள் மயங்கி விட்டார்கள்... 


• பொய் சொல்வதில் திமுகவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம்..


• இந்தியாவிலேயே மாணவர்களுக்கு ஆள் பாஸ்(ALL PASS) வழங்கிய முதலமைச்சர் எடப்பாடியார் தான்.


• வருகின்ற காலம் அண்ணா திமுகவிற்கு எழுச்சி காலம், திமுகவிற்கு வீழ்ச்சி காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


-மேலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகள் பற்றியும், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினியும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு முன்னதாக எட்டையபுரத்தில் நடைபெற்ற இந்த கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் வாசிக்க கூட்டத்தின் தீர்மானங்களாக; அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்திட வேண்டும், எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதை போல ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும், எட்டயபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் படிக்கும் மாணவிகளுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்ட விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.