விளாத்திகுளத்தில் அதிமுக துவக்க நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க நாள் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழுவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அதிமுக கட்சி துவக்க நாளை கட்சியினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்,மகேஷ், பால்ராஜ் நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் குட்லக் செல்வராஜ்,வேல்முருகன், ஆசைத்தம்பி,சாண்முகசாமி மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.