கபடி போட்டியை தொடங்கி வைத்த அதிமுக நகர செயலாளர் ச.ராஜகுமார்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட  ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள  அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன்,ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு,

A.அஜித்குமார் நினைவு கபாடி குழு ஜெகவை பாய்ஸ் கபாடிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டியினை  தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ச.ராஜகுமார்    துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார்.




போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு நகர செயலாளர் ச.ராஜகுமார் பரிசுகளை வழங்கினார். 




நிகழ்வில் அவைத் தலைவர் கங்கையா,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மோகன்   உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.