அமுதகவி உமறுப் புலவர் 382வது பிறந்தநாள் விழா: அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மரியாதை!
சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுதகவி உமறுப் புலவர் 382வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பிறந்த நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் அமுதகவி உமறுப் புலவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அதிமுக எட்டையாபுரம் நகர அவைத்தலைவர் கணபதி, கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, எட்டையாபுரம் ஜமாத் தலைவர் காஜா மைதீன் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.