விளாத்திகுளம் அதிமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா !
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்,தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், விளாத்திகுளம் முன்னாள் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், புதூர் முன்னாள் சேர்மேன் சுசிலா தனஜெயன், ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகரச்செயலாளர் மாரிமுத்து, அதிமுக கழக நிர்வாகி குட்லக் செல்வராஜ், உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.