விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஜெ.பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஜெ.பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் வரதராஜ பெருமாள் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் பொதுமக்களுக்கு ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, முன்னாள் வார்டு கவுன்சிலர் ஆசைத்தம்பி,கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.