விளாத்திகுளம் அருகே குளத்தூரில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த ஏராளமான ஜோடி மாடுகள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாலையம்மன் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு சூரங்குடி கிராம பொதுமக்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் சின்னமாட்டு பந்தயம் 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு பந்தயம் 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்ட 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் இராமநாதபுரம், மதுரை,தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை  விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் கொடிசைத்து தொடங்கி வைத்தார். நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை காண பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.