விளாத்திகுளம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டர்: ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்!
திருப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், மில்லியன்ருமான ராஜ்குமார் என்பவர், திருப்பூர் பகுதியில் பல்வேறு நூர்பாலை நடத்தி வருகிறார், தமிழகம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறார், இவருக்கு சொந்தமாக 3 ஹெலிகாப்டர் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் தனது ஹெலிகாபற்றை மணிக்கு 2 1/2 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் உள்ளிட்ட தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தனியார் நூற்பாலை நிறுவன தொழிலதிபவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது,இந்த கூட்டத்திற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் முறையாக அனுமதி பெற்று திருப்பூரில் இருந்து 40 நிமிடத்தில் தனது சொந்த ஹெலிபேட் மூலமாக விளாத்திகுளம் அருகே உள்ள மேம்பாரில் உள்ள தனது நண்பர் நடத்தி வரும் தனியார் பள்ளியின் மைதானத்தில் மதியம் 1:00 மணி அளவில் வந்து இறங்கி அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கடற்கரை பகுதியில் இருக்கும் தனியார் உணவகம் & தங்கும் விடுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தனது நண்பரின் காரின் மூலமாக சென்று கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்பு மாலை 3 மணி அளவில் வேம்பாரில் இருந்து கிளம்பி திருப்பூர் சென்றடைந்தார்.
வேம்பார் கிராமத்தில் இறங்கிய ஹெலிகாபட்டரை அக்கிரம மக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடனும் பார்த்தனர்.