பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை:ஆட்டுக்கிடாய்கள் விளையும் கடுமையாக உயர்வு - இறைச்சி விலை கூடுவதற்கு வாய்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி , தேனி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டி உள்ளது. வழக்கமாக சனிக்கிழமை தொடங்கும் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நேற்று தொடங்கி விட்டது சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடுரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.வளர்ந்த ஆடுகள் ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1200 வரை விற்பனையானது. இது இது கடந்த ஆண்டை விட கிலோவிற்கு ரூ.300 வரை உயர்ந்துள்ளது 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடாய் 12000 முதல் 15000 வரை விற்பனையானது. ஆடுகள் விலைகள் உயர்ந்திருந்தாலும் ஆட்டுக்கிடாய்கள் விற்பனை அதிகமாக காணப்பட்டது.

இதுகுறித்து ஆட்டு கிடாய்கள் வாங்க வந்த நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் கூறும்போது, ‘‘தீபாவளி, பொங்கல், ரம்ஜான் பண்டிகையையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடை பெறும். இறைச்சிக்கு இங்கு தான் வாங்க வருவோம். கடந்த ஆண்ட விட இந்த ஆண்டு விலை கூடுதலாக இருந்தாலும் ஆட்டு கிடாய்கள் தரமாக இருப்பதாகவும், ரெண்டு நாட்களாக விற்பனை நடைபெறுவதால் சுமார் ஒன்பது கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்று உள்ளது என்றார்.
ஆட்டு கிடாய்கள் விலை உயர்ந்து உள்ளதால் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஆட்டு இறைச்சி விற்பனை கிலோ ஒன்றுக்கு 100 முதல் 200 வரை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் புதன்கிழமை எட்டயபுரத்தில் சிறப்பு ஆட்டு சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.