10 நாட்களுக்குப் பின்பு சிறுமியின் உடல் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் நல்லடக்கம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10-ம் தேதி காணாமல் போன 17 வயது சிறுமி 11-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே சிறுமியின் உடலை வாங்குவோம் என்று கிராம மக்கள் பெற்றோர்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளியை கைது செய்ததை தொடர்ந்து பெற்றோர்கள் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலை வாங்கி தற்போது வேடநத்தம் கிராமத்தில் இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த இறுதி சடங்கில் அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தமிழக வெற்றி கழகத்தினர், பாரதிய ஜனதா கட்சியினர், நாம்தமிழர் கட்சியினர் மற்றும் வேடநத்தம் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போது சிறுமியை உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்து வருகின்றனர்.