விளாத்திகுளத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக MGR மேற்கு ஒன்றிய இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் அறிவழகன் என்பவர், இரண்டு இளம் பெண்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள குடோனுக்கு அழைத்து சென்று, அந்த இரு இளம் பெண்களுக்கும் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, விளாத்திகுளம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை வரவழைத்து, அந்தப்பெண்களை தொழிலதிபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி,பாலியல் தொழிலில் ஈடுபடும் போது அதை வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோவை அறிவழகன் அவரது உடன் பிறந்த அண்ணனான விளாத்திகுளம் அதிமுக கழக பேச்சாளரும் சத்துணவு அமைப்பாளருமான இளங்கோ என்பவரிடம் அனுப்பி தொழிலதிபர்கள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர், இவர்களின் மிரட்டலை கண்டு கொள்ளாத அந்த தொழிலை அதிபர் இவர்களுக்கு பணம் தர மறுத்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் மற்றும் இளங்கோ ஆகியோர் இருவரும், விளாத்திகுளம் பகுதி முழுவதும் whatsapp மூலம் அந்த ஆபாச வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் விளாத்திகுளம் காவல்துறையினரிடம் கேட்ட இப்போது, அந்த வீடியோக்கள் விளாத்திகுளம் பகுதியில் எடுக்கப்படவில்லை அது சென்னை போன்ற பெருநகரங்களில் எடுக்கப்பட்ட வீடியோ என்று மலுப்பலான பதில் அளித்துள்ளனர்.
அதிமுக கழக பேச்சாளர் இளங்கோ நிலம் அபகரிப்பு,விளாத்திகுளம் வைப்பாட்டில் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி, சட்டவிரோதமாக வைப்பாற்றில் உள்ள குடிநீரை திருடி டிராக்டர் வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார் என்ற குற்றசாட்டை சமூக ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் அதிமுக MGR மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர் அறிவழகன் இதே போல் பல இளம் பெண்களை அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தொழிலதிபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து தொழிலதிபர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக குற்றம் சாட்டு எழுந்து வருகின்றது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை வாட்ஸ்அப் மூலம் பரப்பி பெண்ணின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் இந்தகாமகொடூர அரக்கன்கள் மீது தமிழக காவல்துறையின் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறிவழகன் மற்றும் இளங்கோ ஆகியோர் இருவரும் பல பெண்கள் தொழிலதிபர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து தற்போது வரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் செல்போன்களிலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் இருவரின் செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ஆபாச வீடியோ கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளாத்திகுளம் வந்த அன்று இந்த ஆபாசவீடியோ வெளியானதாக கூறப்படுகிறது.