விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர்,தேன்,விபூதி உள்ளிட்ட  திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு,வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாதாரணை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.