விளாத்திகுளம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டிப்பரில் எம் சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரிலிருந்து - இராமநாதபுரத்திற்கு நோக்கி கொண்டு சென்றுள்ளார். அப்போது இன்று காலை விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தின் அருகில் வந்து கொண்டிருந்தபோது லாரியை ஓட்டிவந்த மாடசாமி தூக்கக் கலக்கத்தில் ஓட்டி வந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி திடீரென சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த மாடசாமி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் டிப்பர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட எம் சாண்ட் மணல் முற்றிலுமாக பள்ளத்தில் விழுந்து வீணாகியுள்ளது. பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து டிரைவர் மாடசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் டிப்பர் லாரியை ஜேசிபி வாகனங்களை வரவழைத்து மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்....