விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (43), லாரி ஓட்டுனரான இவர்,திருச்செந்தூரிலிருந்து மதுரை பல மார்க்கெட்டில் பழம் ஏற்றுவதற்காக லாரியில் சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள அழகாபுரி - கோடாங்கிபட்டி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து நடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரியின் ஒரு சக்கரம் தனியாக கழண்டு ஓடிய லாரி தலைக்குப்பீராக கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது, இதில் லாரியின் ஓட்டுனர் ராஜபாண்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், இந்த விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வழி பாதையாக போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் சென்றன.