தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இலங்கைக்கு பீடி
இலைகள் கடத்த இருப்பதாக கியூப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது,இதனை அடுத்து Q பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமைக் காவலர்கள் ராமர், இருதய ராஜ்குமார் பழனி பாலமுருகன் குழு அடங்கிய
Q பிரிவு போலீசார் கலைஞானபுரம் TO குளத்தூர் கிழக்கு கடற்கரை
சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்,
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவ்வழியாக வந்த
டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை
செய்தபோது, அந்த வாகனத்தில் 40 மூடைகளில் சுமார் 1500 கிலோ
எடையுள்ள பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது,இதனை அடுத்து பீடிகளை கடத்தி வந்த
பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த லூர்து அந்தோணி (41)மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த மாரியப்பன்(37),திருநெல்வேலி சாந்தி நகர்பகுதியில் சேர்ந்த
முத்துக்குமார்(32)திருநெல்வேலி
கான்சாபுரம் பகுதியை சேர்ந்த சிவபெருமாள்(38) ,திருநெல்வேலி நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த செந்தூர் (20) வல்லநாடு பகுதியை சேர்ந்த சரவணன் (23)ஆகிய ஆறு பேரையும் க்யூப் பிரிவு போலீசார் கைது,அவர்களிடமிருந்த 1500 கிலோ பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட
3 இருசக்கர வாகனம் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
இலங்கைக்கு கடத்த இருந்தசுமார் 1500 கிலோ எடையுள்ள பீடிஇலைகள் பறிமுதல் - 6 பேர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ஆடி கிருத்திகையை" முன்னிட்டு விளாத்திகுளத்தில், ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள்!
அடுத்த
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம் எல் ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026