விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்  ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு பவானிஸ்வரருக்கு100 கிலோ அன்னத்தால் அபிஷேகம்! 



இறைவன் சிவபெருமான் அருபவும்,உருவமும் இல்ல அருள்பெருஞ்ஜோதி வடிவானவர், சிவபெருமானை லிங்க உருவம் கொண்டு வழிபட்டு வருகிறோம், அவ்வாறு வழிபடும் சிவபெருமானுக்கு வருடம் முழுவதும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து வருகிறோம், ஆனால் வருடத்திற்கு ஒருமுறை சிவபெருமானுக்கு அன்னத்தினால் செய்யப்படும் இந்த அபிஷேகம், அந்த சிவபெருமானின் மீது படப்படும் ஒவ்வொரு அரிசி பருக்கையும் சிவலிங்கமாக காட்சி தரும், அப்படி உயர்ந்த நாள் தான்  ஐப்பசி பௌர்ணமி, ஒவ்வொரு அரிசி அன்னத்தாலும் செய்யப்படும் அபிஷேகத்தை கண்டால் கோடான கோடி நன்மை கிடைக்கும், அதனாலதான் "சோறு கண்ட இடமே  சொர்க்கம்" என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதன் ஆடுவது பாடுவது எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காக தான், ஆகவே அன்னம் ஒரு நாளும் குறையாமல் கிடைக்க வேண்டும்,அன்னதருத்ரியம் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் நமக்கு உணவு கிடைக்க கூடிய அருளை இறைவன் வழங்கும் உன்னதமான திருநாள் இந்த ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக நாளாக கூறப்படுகிறது. 

இந்த பௌர்ணமி அன்னாபிஷேகத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் உள்ள லிங்கத்திற்கு அன்னத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.





இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்   திருக்கோவிலில் ஐப்பசி  பௌர்ணமி முன்னிட்டு பவானிசுவரருக்கு 100 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாதாரணை மற்றும் பஞ்சமுக தீவாதாரணை காண்பிக்கப்பட்டது. 




ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு  மீனாட்சி சுந்தரேஸ்வரர்   திருக்கோவிலில் பக்தர்கள் கிரிவலம் நடந்தனர். இதில் விளாத்திகுளம்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இதனைத் தொடர்ந்து அண்ணாபிஷேக அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.