விளாத்திகுளம்
அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் (29) மற்றும் கதிர்வேல் மகன் சத்தியமூர்த்தி (26) ஆகியோர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருந்து எப்போதும் வென்றான் செல்லும் பொழுது, எட்டயபுரத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீர் என பிரேக் பிடித்ததால் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், சத்தியமூர்த்தி காயம் அடைந்தார், இதனை அடுத்து உடலை கைபற்றிய எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், லாரி ஓட்டுநர் ஸ்ரீவைகுண்டம்- புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் முத்து (49)என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.