விளாத்திகுளம் அருகே இரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவரின் மகன் ராகுல் (25), இவர் தனது இரு சக்கர வாகனத்தில் விளாத்திகுளம் அருகே உள்ள இடைச்சியூரணி கிராமத்தில் உள்ள தனது பாட்டியை பார்க்க சென்றுவிட்டு விளாத்திகுளம் வந்து கொண்டிருந்தபோது, வாதலக்கரை கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் பரமசிவம் (65) ,விளாத்திகுளத்தில் இருந்து வாதலக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கரிசல்குளம் - இடைச்சியூரணி இடையே இரு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராகுல் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்,பரமசிவம் காயங்களுடன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ராகுல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.