விளாத்திகுளம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி - மேல பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் முத்துச்செல்வன் (32), திருமணமான முத்துச்செல்வம் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார், தகவல் அறிந்து முத்துச்செல்வம் உடலை கைப்பற்றிய புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.