விளாத்திகுளத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்  “ஆனந்தக் கண்ணீர் வடித்த பெண்மணி” -  நெகிழ்ச்சி அடைய வைத்த நிகழ்வு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள G.V. மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டார பயனாளிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார். 

இதில் கலந்து கொண்ட 220 கா்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சாா்பில் சேலை, வளையல், பழங்கள், குங்குமச்சிமிழ், பிரசவகால பராமரிப்புக் கையேடு, மங்களப் பொருள்கள் என 21 சீர்வரிசை வளைகாப்பு பொருட்கள் வழங்கபட்டன.  அப்போது பல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஈஸ்வரிக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சீர்வரிசைப்ஸபொருள்களை வழங்கிய போது, அவர் கண்கலங்கி ஆனந்த கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை ஆறுதல்படுத்தினர். தனக்கு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில் இவ்வளவு பெயர் மத்தியில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தனக்கு வளைகாப்பு நடைபெற்றது மகிழ்ச்சி  அளித்து மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் சீர்வரிசை வழங்கி போது தன்னுடைய சகோதரன் வழங்கியது போல உணர்வு வந்ததால் தன்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டதாக அந்த பெண்மணி கூறினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.