விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.



கோயம்புத்தூர் மாவட்டம் ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி அந்தோணிமேரி (55), இவர் இவரது கணவர் திருமணி(58), இவரது மருமகன் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிமுத்து (34), ஆகியோர் மூன்று பேரும் 16-08-2026 சனிக்கிழமை மாலை சாயல்குடியில் உள்ள அந்தோணி மேரியின் தாயாரை பார்க்க சென்று விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் கீழஈரால் வந்து கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கனாபுரம் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த நிலை தடுமாறிய அந்தோணிமேரி நிலை தடுமாறிய கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து அந்தோணி மேரியின் உடலை கைபற்றிய சூரங்குடி காவல் நிலைய போலீசார் பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.