விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி - துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருக்கணி என்பவரின் மனைவி சண்முகலட்சுமி (47), இவர் 13-09-2025 சனிக்கிழமை வீட்டில் மிக்ஸி போடுவதற்காக ஈரக்கையுடன் வயரை ப்ளக் பாய்ண்டில் மாட்டும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சண்முகலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் சண்முகலட்சுமி உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.