எட்டயபுரம் அருகே ஆடு மேய்க்க சென்றவரை தாக்கி கடித்துக் குதறிய காட்டுப்பன்றி - பாதிக்கப்பட்ட தொழிலாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஆர். வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58), விவசாயக் கூலி தொழிலாளியாக உள்ளார்..மேலும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம்போல முருகேசன் தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு மேச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று முருகேசன் தாக்கி , கை கால் பகுதியில் படித்து குதறி உள்ளது. முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காட்டுப்பன்றியை விரட்டியது மட்டுமின்றி காயமடைந்த முருகேசனை மீட்டு எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப் பன்றிகளினால் விவசாயமும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை காட்டுப்பன்றிகள் தாக்கத் தொடங்கியுள்ளது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு விரைந்து காட்டுப் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்க வைத்துள்ளனர்.