விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் (வாட்ச்மேன்) பரிதாபமாக உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டித்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகன் மாரிமுத்து (55),  இவர் அழகாபுரி கோடங்கிபட்டியில் உள்ள தனியார் நூல் ஆலையில் (வாட்ச்மேன்) காவலராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது (மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை) அழகாபுரி வெம்பூர் இடையே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மாரிமுத்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இந்த விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்  தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகன் சுருளி ஆண்டவர்(29) என்பவரை பிடித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.