விளாத்திகுளம் அருகே வாலிபர் அடித்துக் கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தரவைக்குளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிமிக்கல், இவரது படகில் காரைக்குடி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் (33), விசைப்படகில் தங்கி மீன்பிடித்து தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை தருவைகுளம் மீன் ஏல கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஆனந்த் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை அடுத்து ஆனந்தின் உடலை கைப்பற்றிய தரவைக்குளம் காவல் நிலைய போலீசார், ஆனந்த் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு காரணமான பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.