விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு 255 கோடி ரூபாய்க்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது : திமுக வேட்பாளர் மார்கண்டயேன் தீவிர பிரச்சாரம்!
தேசிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர்,மிளகுநத்தம், முள்ளூர்,அய்யர்பட்டி, முத்துக்குமாராபுரம், வில்வமரத்துப்பட்டி, கே.சுந்தரேஸ்வராபுரம், சுப்புலாபுரம்,காடல்குடி, சுந்தரபச்சையாபுரம், குஞ்சையாபுரம், சென்றாயபுரம்,ராமச்சந்திராபுரம்,முத்தையாபுரம், லட்சுமிபுரம்,புதுக்கிராமம்,மல்லீஸ்வராபுரம்,வடமலாபுரம்,சின்னூர், மாவிலோடை உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மார்க்கண்டேயனக்கு அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயண், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் 255 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, கே.சுந்தரேஸ்வராபுரம் கிராமத்திற்கு 1/5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டுள்ளது, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 443 கிராமக் கோவில்களுக்கு நன்கொடை வழங்கி உள்ளேன், கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்திற்கு ரேஷன் கடை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
அதேபோல் தமிழக முழுவதும் மக்களை தேடி மருத்துவத்திற்கு மட்டும் 3000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது, முதியோர் ஓய்வூதியத் தொகை 1200 ரூபாயிலிருந்து 2000 ஆக உயர்த்தப்படும். திராவிட மாடலா ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் மார்கண்டயேன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, முன்னாள் கவுன்சிலர் நடராஜன்,வழக்கறிஞர் பாபு செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.