தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு
உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 7-ம் மாணவியிடம், அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து
வரும் மில்டன் ஞானசிங் என்பவர் சக மாணவர்கள் முன்னிலையில் தகாத முறையில் ஆபாசமாக
பேசியது மட்டுமன்றி, பாலியல்
சீண்டலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த 7-ம் வகுப்பு மாணவி இதுபற்றி வீட்டில் யாரிடமும்
கூறாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த எறும்பு பொடியை
சாப்பிட முயன்றுள்ளார். அதனைக்கண்ட சிறுமியின் தாயார் சிறுமியை தடுத்து
அச்சிறுமியிடம் கேட்டபோது பள்ளியில் நடந்தவற்றை தன் தாயிடம் மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் சென்று
புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் மில்டன் ஞானசிங்-கை
சஸ்பெண்ட் செய்கிறோம் என மழுப்பலாக கூறியுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது
நம்பிக்கை இழந்த பெற்றோர் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரனிடம், ஆசிரியர் மில்டன் ஞானசிங் மீது தக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த
புகாரின்பேரில், விளாத்திகுளம்
அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மில்டன் ஞானசிங்
மீது போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில்
வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், கைதாகியுள்ள தமிழ் ஆசிரியர் மில்டன் ஞானசிங்
அடிக்கடி பள்ளியில் பயிலும் பல மாணவிகளிடம் இதுபோன்று தகாத முறையில் பேசி
வந்ததாகவும், பாலியல்
சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Vilathikulam
மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மர்மமான முறையில் கார் டிக்கியில் ஒருவர் எரித்துப் படுகொலை : போலீசார் விசாரணை!
அடுத்த
போலி சிம் கார்டு விற்றவர் கைது
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026