விளாத்திகுளம் அருகே குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குருபெயர்ச்சியை
முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம்
கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமை
வாய்ந்த பார்வதி சமேத பவானிஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சணாமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், தேன்,பஞ்சாமிர்தம், பழச்சாறு
உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபகாரனை நடைபெற்றது.அதற்கு
முன்னதாக குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில்
சுற்றுவட்டார பகுதிகளை சிறந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர்.