விளாத்திகுளம் அருகே பறையடித்து வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து புதூர் பேரூராட்சி வளாகம் வரை சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 25. 11. 2023 மற்றும் 26. 11. 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை கோஷங்களாக எழுப்பியும், பறையடித்தும் தேர்தல் விழிப்புணர்வு பேரணியாக நடை பயணம் மேற்கொண்டனர்.இந்த வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணியை விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக, புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை அன்னைஷீபாபிளவர் லெட், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் யுவராம், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பறையடித்து வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிராம உதவியாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அடுத்த
அதிக விலைக்கு உரம் விற்பனை... கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்?
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026