ஐப்பசி முதல் நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் சன்னதியில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஐப்பசி மாதத்தின் முதல் நாளான இன்று சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாரதனை கட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு பூ, மாலை உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு பூஜையைக் கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அருட்பிரசாதத்தைப் பெற்றுச்சென்றனர்.