எட்டையாபுரத்தில் அருகே உள்ள நடுவிற்பட்டி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் அருகே உள்ள நடுவிற்பட்டி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில்,பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்கி, தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது மூலவருக்கு சந்தனம் பால் பன்னீர் தயிர் இளநீர் தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதரணை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும்பஜார் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ் மற்றும் எட்டையாபுரம் ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால் பழம் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர் வாலம்பட்டி ராமர் ஹரிஹரசுதன், எட்டயபுரம் ஒன்றிய துணைத் தலைவர் பாலாஜி, கிளைத்தலைவர் பாலமுருகன், மந்திர மூர்த்தி, குகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.